3
இங்கிலாந்தின் ஸ்விண்டனில் 55 வயதான சாரா ஃபாரெஸ்டர் எனும் பெண் கொல்லப்பட்டமை தொடா்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமி பிணையில் விடுவிக்கப்பட் டுள்ளாா்.. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வில்ட்ஷயர் நகரத்தில் உள்ள ஒரு இல்லத்தில் 55 வயதான சாரா ஃபாரெஸ்டர் உயிாிழந்து காணப்பட்டுள்ளாா். திருமதி சாரா ஃபாரெஸ்டர் பணிபுரிந்த மனநல தொண்டு நிறுவனமான கெல்லி அறக்கட்டளையின் அறிக்கை, “எங்கள் அன்பான சாராவின் திடீர் இழப்பில் அனைவரும் மனம் உடைந்துள்ளனர்” எனத் தொிவிக்கப்பட்டுள்ளது அவர் தொண்டு நிறுவனத்திற்கும் தனது இரண்டு இளம் குழந்தைகளுக்காகவும் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தார்,” எனவும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.