பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

by ilankai

நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.எங்கள் விடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தார்கள் மாவீரர்களின் வீரத்தை மட்டுமல்ல, அவர்களை உருவாக்கிய பெற்றோர்களின் உழைப்பையும் நாங்கள் என்றும் நினைவில் கொள்வோம்.இன்று விதையாகிய சந்தணபேழைகளின் வீரத்தின் ஊடாக, நாம் சுவாசிக்கும் காற்றில் அவர்களது மூச்சுகாற்றும் கலந்து இருக்கின்றது.அந்த தியாகமானது எப்போது மறக்க கூடியது ஒன்றல்ல.இளையோர் அமைப்பை சார்ந்த செல்வி ஜென்சியா நியூட்டன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்கள்.தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தென் கிழக்கு பகுதி பொறுப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.ஈகை சுடரினை லெப்டினன் கேண்ல் கதிரவன் அவர்களின் தாயாரும் லெப்டினன் கேணல் ஜெயந்தி அவர்களின் மாமியாருமாகிய கமலாவதி கந்தசாமி அவர்கள் ஏற்றி வைப்பார்.தொடர்ந்து நினைவு கல்லறைக்கான மலர்மாலை அணிவித்தல். மாவீர்ர் நினைவு கல்லறைக்கான மலர்மாலையினை லெப்டினன் கேணல் சந்தோசம் மாஷ்டர் மற்றும் வீரவேங்கை புதியவன் அவர்களின் சகோதரர் திரு தவநேசன் அவர்கள் அணிவித்தார்கள்.வடமேற்க்கு பகுதியில் பொதுச்சுடரினை வீர வேங்கை ஈழவள் ( பத்மநாதன் பத்மினி) அவர்களின் சகோதரி திருமதி. பிறேமாவதி செந்தில்வேல்மற்றும் வீர வேங்கை லெப்டினன்ட் கேணல் . கோபி மாஸ்ரர் (திருநாவுக்கரசு சதீஸ்குமார்) அவர்களின் புதல்வி செல்வி. டிலானி சதிஸ்குமார் ஆகியோர் ஏற்றிவைத்தார்கள்.தமிழீழ தேசியக்கொடியினை தமிழர்ஒருங்கிணைப்பு குழு வடமேற்கு இலண்டன் பிராந்திய மாவீரர் பணிமனை பொறுப்பாளரும் லெப் கேணல் மனுச் அவர்களின் சகோதரருமான திரு. கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்ஈகைச்சுடரினை வீரவேங்கை ஜெயசக்தி அவர்களின் சகோதரர் திரு. குணரெட்ணம் கோகுலதாஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் நினைவு கல்லறைக்கு மலர்மாலையினை லெப்டினன்ட் அர்ஜுன் ( பத்திநாதன் தர்ஷன் ) அவர்களின் சகோதரர் திரு ரோஸ் நிக்கோலஸ் அவர்கள் அணிவித்தார்கள்.மாவீரர் பெற்றோர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கப்பட்டு உணவுகள் பரிமாற்ப்பட்டு தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவடந்தது.

Related Posts