மாவீரர் நினைவேந்தல் வாரத்தையொட்டி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) மன்னார் புகையிரத வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் ப.குமார் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. -இதன் போது மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு,இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சியின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு. – Global Tamil News
2
previous post