மாவனல்லை கடுகண்ணாவ பிரதேசத்தில் சனிக்கிழமை 22ஆம் திகதி காலை மண்சரிவு மற்றும் பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம் மீது விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் 1.சமரகோன் முதியன்சேலாகே, லஹிரு மதுசங்க சமரகோன் (வயது 31) வெலிகல்ல, மாவனெல்ல. ராசலிங்கம் கருணாகரன் (வயது 66) பஹல, கடுகன்னாவ, ஹிங்குல. (கடை உரிமையாளரின் தந்தை) கிசாலிங்கம் நிஷாந்தனி கருணாகரன், வயது 38, பஹல, கடுகன்னாவ, ஹிங்குல, (கடை உரிமையாளரின் மனைவி) லிண்டன் ஜனாக குமார ஜயசிங்க(வயது 66) கிரிபோலவத்த, கடுகண்ணாவ, ருவன் குமார அபேசிறி சமரநாயக்க (வயது 42) நியூ டவுன், எம்பிலிப்பிட்டிய குணரத்ன முதியன்சலாகே, புலஸ்தி பண்டார (வயது 33) ஹீனரந்தெனிய, கம்பளை. காயமடைந்தவர்கள் சம்பத் பண்டார ஜயரத்ன (வயது 44) தெல்கஹா எல, மீகஹகெதர. வத்தப்பல, கடையில் தொழிலாளியாக பணிபுரிந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் லஹிரு ருமேஸ் ரத்நாயக்க (வயது 33), எம்பில்மீகம, பிலிமத்தலாவை ருச்சிர திலான முனசிங்க (வது 31) சந்துன் உயன பிலிபத்தலாவை, ஆராச்சிலாகே சந்திரிகா வசந்தி (வயது 59) ஹாலியத்த குழந்தைவேல் ராமையா ரகுநாதன் சசிதரன் (வயது 40) பஹல, கடுகன்னாவ, ஹிங்குல. மீட்பு பணிகள் கடந்த 22ம் திகதி இரவு சுமார் 7.15 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. கொழும்பு – கண்டி வீதியின் பகுதி இன்னும் மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக, கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் ஹேரத்திடம் நாம் விசாரித்தபோது, இறந்தவர்களுக்கு 1 மில்லியனும், இறுதிச் சடங்கு செலவுகளுக்கு ரூ. 100,000 மும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், மீதமுள்ள தொகை பின்னர் வழங்கப்படும் என்றும் கூறினார். காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தயாரிக்கும், மேலும் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆராயும். தற்போது, சம்பவம் நடந்த இடத்திலிருந்து இரண்டு குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும், அதே பகுதியில் பல ஆபத்தான பாறைகள் உள்ளன.
ஹிங்குல கடுகண்ணாவ அனர்த்தத்தில் 6 பேர் மரணம்! – Global Tamil News
6