8
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில், ஒருவர் முன்னதாகவே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் , மண்ணுக்குள் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் 10 மணி நேர மீட்புப் பணியின்போது மேலும் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.இராணுவம், தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.உயிரிழந்தவர்களில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் எனத் தெரியவருகின்றது.