6
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை யோகசுவாமிகள் சமாதி திருக்கோயிலுக்கு கண்டியில் இருந்து வருகை தந்த 120 பெளத்த துறவிகள் மற்றும் அடியவர்கள் அங்கு நடைபெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர். யோகசுவாமிகளின் வாழ்க்கை பற்றியும் அவரது போதனைகள் பற்றியும் நூல்களில் படித்ததாகவும், இந்த ஆத்ம ஞானியின் சமாதியை தரிசிக்க வேண்டும் என வந்ததாகவும் கூறினார்கள். அத்துடன் அங்கு யோகசுவாமிகள் வாழ்க்கை, போதனைகள் பற்றிய செய்திகளை மிகவும் பக்தி சிரத்தையுடன் கேட்டு மகிழ்ந்தனர்.