யாழில். கடலட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

by ilankai

யாழ்ப்பாணத்தில் கடலட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான் குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் (வயது17) என்ற சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணை காவல் பணிக்காக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு சென்ற சிறுவன் காலையில் கரை திரும்பாத நிலையில் காணாமல் போயிருந்தார். சிறுவனை தேடி அப்பகுதி மக்களால் தேடுதலை மேற்கொண்டனர்.இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ,யாழ்ப்பாண பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Related Posts