சடலம் மீட்பு! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் – குருநகர் கடலில் சிறுவன் ஒருவன் இன்றைய தினம் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணையை பார்க்க நேற்று இரவு சென்ற சிறுவன் காணாமல்போயிருந்தார். சிறுவனை தேடி அப்பகுதி மக்களால் தேடுதலை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. குறித்த சிறுவன் படகிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர். Spread the love  குருநகர் கடல்

Related Posts