மண்சரிவு உயிாிழப்பு அதிகாிப்பு – Global Tamil News

by ilankai

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில்   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள்   மீட்கப்பட்டதனை தொடா்ந்து  உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதேளை, மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ள போதிலும்   தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர்,  காவல்துறையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக  குறிப்பிடப்படுகின்றது

Related Posts