மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வின் இறுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இ தேவேளை வலி வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.குறித்த நினைவாலயத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை தேச விடுதலைக்காக மூன்று மாவீரர்களின் தந்தையான மகேந்திரம் பொது நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து மண்ணுக்காக உயிர்நீத்த வீரமறவர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. எதிர்வரும் 27 ம் திகதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளதுடன் 26 ம் திகதி மாலை 6.00 மணிக்கு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னர்.
வலி மேற்கு பிரதேச சபை – தெல்லிப்பழையில் மாவீரர்களுக்கு அஞ்சலி – Global Tamil News
3
previous post