வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹவால்,குருநகர் பகுதியை சேர்ந்த 19 பேருக்கு வீட்டு உறுதிகள் வழங்கப்பட்டன. குருநகர் பகுதியில் 1983ஆம் ஆண்டு கால பகுதியில் வீடமைப்பு அமைச்சினால் , வீடற்ற மக்களுக்கு என கட்டி கையளிக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் , இது வரையில் வழங்கி வைக்கப்படாத நிலையில் , நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் , பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு அமைச்சரால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
யாழில். 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட உறுதி பத்திரங்கள்
2