2
நோர்வேயில் இருந்து விடுமுறைக்கு யாழ். வந்தவர் கிணற்றினுள் விழுந்து உயிரிழப்பு நோர்வேயில் இருந்து விடுமுறைக்கு தாயகம் திரும்பியவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நோர்வேயில் இருந்து , விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்தவர் , நேற்றைய தினம் வியாழக்கிழமை வீட்டில் உணவருந்திய பின்னர் , கை கழுவதற்க்காக கிணற்றடிக்கு சென்றவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.