நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்க வதிவிடப் பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களை ஆயுதமேந்திய கும்பல் ஒன்று கடத்திச் சென்றதாக அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.நாட்டின் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியின் மீது இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.அக்வாரா உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள செயிண்ட் மேரி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கடத்தப்பட்டதாக நைஜர் மாநில அரசு ஆழ்ந்த வருத்தத்துடன் செய்தியை வெளியிட்டது.நைஜீரிய தொலைக்காட்சியான அரிஸ் டிவி, நைஜர் மாநிலத்தில் உள்ள பள்ளியில் இருந்து 52 மாணவர்கள் கடத்தப்பட்டதாகக் கூறியது.இன்று அதிகாலை 1:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் ஆயுதமேந்திய தாக்குதல்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து, மாணவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு காவலரைக் கடத்திச் சென்றதாக உள்ளூர் கத்தோலிக்க மறைமாவட்டம் கூறியது. # Nigeria
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் 52 மாணவர்கள் கடத்தல்!
2