யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய குழந்தையும் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது. இளவாலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த பெப்ரவரி மாதம் இரட்டை குழந்தைகளை பிரசவித்தார். அக்குழந்தைகளின் ஒரு குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் திடீர் சுகவீனம் காரணமாக பிறந்து இரண்டாவது மாதமே உயிரிழந்துள்ளது. இந்நிலையில் மற்றைய குழந்தையான தர்சன் அஸ்வின் என்ற குழந்தை 09 மாதங்களில் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது. குழந்தை திடீரென வாந்தி எடுத்ததை அடுத்து , பெற்றோர் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் , குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர் உயிரிழப்புக்கள் காரணம் தெரியவராத நிலையில், குழந்தையின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
09 மாதங்களுக்குள் இரு குழந்தைகளும் உயிரிழப்பு! – Global Tamil News
2