அனுர அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அனுர அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நுகேகொடையில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் ஐஎம்எப் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவோம் என்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஐஎம்எப் உடன் இணைந்து கொண்டனர்.தாங்கள் தேர்தலில் வெற்றிபெற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி சாதாரண மக்களது வாக்குகளை வேட்டையாடிய இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப் பின்னர் அந்த வாக்குறுதிகளை புறம்தள்ளிவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சுமை அதிகரிப்பைக் கொடுத்துள்ளது.மறுபக்கம் அரச ஊழியர்களை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. அரச ஊழியரகளை பழிவாங்கும் செயற்பாடுகளை தீவிரமாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.மேலும், தங்களுடைய அரசியல் தேவைக்காக அரச ஊழியர்களை பயன்படுத்திக் கொண்ட அனுர அரசாங்கம் தற்போது அவர்களை கைவிட்டுள்ளது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எனினும் பெரியளவில் ஆட்கள் திரள்வரென எதிர்பார்த்த பேரணி பெரிய அளவில் சோபித்திருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
நாமல் பருப்பு இம்முறையும் அவியவில்லை!
0