தேசிய சமத்துவத்துக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். நினைவேந்தல் நடத்துவதற்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடமளிக்கப்பட்டது. 2025 நவம்பர் மாதமும் அவ்வாறேதான என அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உள்ளது. அந்த உரிமை என்பது புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல. எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் நினைவிடம் அமைக்கவில்லை. அவர்களுக்கான நினைவுத் தூபி எம் மனங்களில் இருந்தால் போதும் எனவும் அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதனிடையே தமிழர் தாயகமெங்கும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.துயிலும் இல்லங்களில் இன்று ஈகச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதனிடையே மாவீரர்களின் உறவுகள் உரித்தாளிகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது.இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் பொது நினைவேந்தலுடன் முடிவுக்குவரும்.மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான இன்று (21.11.2025) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உலகெங்கும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுவது வழமையாகும்.
மனதில் இருப்பதால் சிலைகள் தேவையில்லையாம்!
5
previous post