6
யாழ்ப்பாணத்தில் பாம்புக்கடிக்கு இலக்கான மாணவன் , வைத்தியர்களின் கண்காணிப்புடன் உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் உயர்தர பரீட்சை எழுதுவதற்காக பாடசாலைக்கு வந்த வேளை பாடசாலை வளாகத்தில் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார் அதனை அடுத்து பரீட்சை மண்டபத்தில் கடமையில் இருந்த அதிகாரிகள் மாணவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியசாலையில் மாணவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு , நோயாளர் காவு வண்டியில் , வைத்தியர் மற்றும் தாதியர்களுடன் மாணவன் மீள பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து வந்து வைத்திய கண்காணிப்பில் மாணவன் பரீட்சை எழுதியுள்ளார்.