வடக்கில் இராணுவத்தினர் ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தினை தான் நடாத்துகின்றனர் என என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்த கருத்து தவறான கருத்து என தேசிய மக்கள் சக்தியின் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர் சபையில் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது, வலி. வடக்கில் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க உள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் எனவும் , ஆனால் அரசாங்கம் அவ்வாறு தனியார் காணிகளை சுவீகரிக்க முயற்சிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் தவறான தகவல்களை பரப்புவதை கண்டித்து , சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தெரிவித்தார். அதற்கு சபையில் , சில உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் , தவறான தகவல்களுக்காக சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாயின் , வடக்கில் இராணுவத்தினர் 12 இடங்களில் சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்தும் நிலையில், ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தை மாத்திரமே நடத்துவதாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்த தவறான கருத்துக்கும் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அமைச்சர் பிமல் சொன்ன தகவல் தவறானது தான். அதனை நாமும் இந்த சபையில் ஏற்றுக்கொள்கிறோம் தெரிவித்தார்.
அமைச்சர் பிமல் தவறான கருத்துக்களை கூறினார் – Global Tamil News
3