தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்! –...

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்! – Global Tamil News

by ilankai

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார். இதனால் அநாதரவாக நிர்க்கதியாகநின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா அம்மா (வயது 75) நோயுற்ற நிலையில், கடந்த சில தினங்களாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். “தகப்பன் வந்தால் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு போயிடுவன் இவங்களும் விடுறாங்களில்ல என்னவாம் சொல்லுறாங்க .. ” என நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் , தனது உறவினர்களிடம் கேட்டவாறு இருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்னர். ஆனந்தசுதாகரனின் மனைவி உயிரிழந்த நிலையில் , இறுதி சடங்கில் கலந்து கொள்ள சிறைச்சாலை வாகனத்தில் ஆனந்த சுதாகரன் அழைத்து வரப்பட்டு , மீண்டும் சிறைக்கு அழைத்து செல்ல தயாரான போது அவரது மகளும் அப்பாவுடன் செல்ல போகிறேன் என கூறி சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதனை அடுத்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பில் ஆனந்தசுதாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் இன்று 07 வருடங்கள் கடந்தும் மூன்றாவது ஜனாதிபதி பதிவுக்கு வந்த நிலையிலும் ஆனந்தசுதாகரன் விடுதலை இன்றி சிறையிலையே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts