யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலையால் ,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு வீடு முற்றாகவும் , 06 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ் . மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 218 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு ஒரு வீடு முழுமையாகவும் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும், வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்கள் , மதகுகளை தடை செய்ய வேண்டாம் என கோருகிறோம். அத்துடன், எதிர்வரும் நாட்களில் பகல் வேளைகளில் மின்னல் தாக்கம் ஏற்பட கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் , பொதுமக்கள் அது தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை – யாழில் 218 பேர் பாதிப்பு – ஒரு வீடு முற்றாக சேதம் – Global Tamil News
1