திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை பிரதான நீதவான் இன்று புதன்கிழமை (19) உத்தரவிட்டுள்ளார்.இலங்கை காவல்துறை கண்காணிப்பாளர் சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.திருகோணமலையில் உள்ள டச்சு விரிகுடா கடற்கரையில் சம்புத்த ஜெயந்தி விஹாராதிகாரி தேரர் அனுமதியின்றி கட்டிடம் அமைப்பது தொடர்பாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு தொடர்பாக காவல்துறை அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்திற்;கொண்டு, தொடர்புடைய கட்டுமானத்தின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக் குறிக்கும் அறிக்கையை 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே திருகோணமலைக் கடற்கரையில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விடயத்திலும்,பின்னர் சிலை காவல்துறையினால் அகற்றப்பட்ட விடயத்திலும் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கோ,முஸ்லிம் மக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.தமிழர்களும் முஸ்லிம்களும் என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நட்புணர்வுடனே பழகி வருகின்றனர்.ஆனால், காவல்துறையினரே மிகவும் மோசமாக நடந்து கொண்டனர்,எனவே யாரும் இதனை இனரீதியான மோதல் என்று கூறி விடயத்தை திசை திருப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
விகாரை இருந்தபடியே இருக்கட்டும்?
4
previous post