பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது  இஸ்ரேல்  தாக்குதல் – 13 பேர் பலி – Global Tamil News

by ilankai

லெபனானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட  தாக்குதலில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்  இந்த இடம் இஸ்ரேலுக்கெதிரான தாக்குதல்களைத் திட்டமிடவும் ,  நடத்தவும் ஹமாஸால் பயன்படுத்தப்பட்டது  எனவும் இஸ்ரேலிய இராணுவம்  தொிவித்துள்ளது. இருந்த   போதிலும்  இந்த குற்றச்சாட்டுக்களை  ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்திற்குப் பின்னர், லெபனானில் உள்ள நபர்கள் மற்றும் இடங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.  பெரும்பாலான தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவை இலக்காகக் கொண்டிருந்த போதிலும் , இஸ்ரேல்   ஹமாஸ் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக  குறிப்பிடப்படுகின்றது.

Related Posts