தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு அமைக்கின்றது இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. அதேவேளை நினைவாலயத்தை அமைக்கும் பணிகள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞரணியால் முழு வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழில் தொடரும் மழை காரணமாக நினைவாலயம் அமைக்கப்படும் பகுதிக்குள் வெள்ள நீர் உட்புகாத வகையில் , மண் மூடைகள் அடுக்கப்பட்டு , மண் நிரவப்பட்டு வருகிறது.
நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரார்பணம்
1