கட்டுநாயக்கவில் இறங்கச் சென்ற விமானங்கள் மத்தலவுக்கு அனுப்பப்பட்டன – Global Tamil News

by ilankai

இன்று புதன்கிழமை (19) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கச் சென்ற மூன்று விமானங்கள், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.  விமான நிலையதைச் சுற்றியுள்ள பகுதியில் காணப்பட்ட  அடர்ந்த மூடுபனி காரணமாகவே இவ்வாறு  திருப்பி விடப்பட்டுள்ளன சீனாவின் குவாங்சோவிலிருந்து  சென்ற  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-881,  இந்தியாவின் மும்பையிலிருந்து  சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-142,  மற்றும்  சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்துசென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-142 ஆகியவையே இவ்வாறு மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. –

Related Posts