கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் , மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் , யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பதிவான மழை வீழ்ச்சியில் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 101.7 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. அதேவேளை மழை காரணமாக 04 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களின் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன மேலும் கடந்த நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையுடன் குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள போதிலும், எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
யாழில். அதிக மழை – 14 பேர் பாதிப்பு ; 04 வீடுகள் சேதம்
3
previous post