மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது எனவும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (18.11.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனிடையே விடுதலைப்புலிகள் போராளிகளை நினைவு கூர முடியாதென அரசு அறிவித்துள்ள நிலையில் மற்றொரு அமைச்சர் சந்திரசேகரன் மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் அனைவரும் நினைவுகூரலாம் என்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.கார்த்திகை வீரர்கள் என நினைவுகூரச் சென்ற அடிமைத் தமிழ் நாடாளுமன்ற ஜேவிபி தோழர்களை கார்த்திகை வீரர்கள் என்று இதே மாதம் நினைவுகூரும் உங்களுக்கு அந்த உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு என்பது தெரியாதா?எனவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மாற்றம்: எங்கிருக்கிறது?
1
previous post