ஜேவிபியின் வடக்கு கிழக்கு பாராளமன்ற உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , செல்லத்தம்பி திலகநாதன், வைத்தியர் ஸ்ரீ பாவனந்தராஜா ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுகீடுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள் இவ் ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 455 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சம நேரத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 193 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவ் ஆண்டுடன் ஒப்பிடும் போது அடுத்த ஆண்டுக்கு 4.87 % அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மொத்த அரச செலவீனத்தில் 10% ற்கு அதிகமான செலவீனத்தை விழுங்கும் பாதுகாப்பு அமைச்சு தங்கள் இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்தை வடக்கு கிழக்கில் நிறுத்தியுள்ளது அதாவது 10:1 என்ற விகிதத்தில் வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவத்தை வைத்திருக்கின்றார்கள் விசேடமாக வடக்கு கிழக்கு அரச பிரதேச செயலகங்களின் தரவுகளின் படி குறைந்தது 18,000 ஏக்கர் நிலம் இப்போதும் இராணுவத்தின் வசம் மட்டும் இருக்கின்றதுதொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை,வன வள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட மத்திய அரச நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் , சட்டவிரோத குடியேற்றங்கள் என சகல அநீதிகளுக்கும் பின்னணியில் இராணுவத்தை பயன்படுத்துகின்றார்கள் இது போதாதென்று விவசாய பண்ணைகள், நீர் நிலைகள் , மேய்ச்சல் தரைகள் என வடக்கு கிழக்கின் விவசாய பொருளாதாரத்திற்கு பங்களிக்க வேண்டிய துறைகளை ஆக்கிரமித்து முடக்கி வைத்து இருக்கின்றார்கள் . இந்திய மீனவர்களுக்கு மேலதிகமாக வடக்கு கிழக்கு கடல் வளத்தை ஆக்கிரமித்து கடற்பொருளாதாரத்தை சீரழிக்கும் தென்னிலங்கை மீனவர்களின் வாடிவீடுகளுக்கு இராணுவம் தான் பாதுகாப்பாக நிற்கின்றது விசேடமாக வடக்கு கிழக்கு சட்டவிரோத கடற்தொழிகளுக்கும் ஆதரவாகவே இராணுவம் செயற்பட்டு வருகின்றது
பழக்க தோசம்: கையை தூக்கினர்!
1
previous post