மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக்  துகள்கள் – Global Tamil News

மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக்  துகள்கள் – Global Tamil News

by ilankai

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தென் பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் தற்போது வடபகுதி கரையோரங்களில் கரையொதுங்கும் நிலையில் மன்னார் கடற்கரையோரங்களிலும் தற்போது கரையொதுங்கி வருகின்றன. வடக்கு கரையோரம் சார்ந்த பகுதிகளில் பேசாலை,காட்டாஸ்பத்திரி , சிறுத்தோப்பு  ஆகிய கடற்கரையோரங்களில் குறித்த பிளாஸ்டிக் துவல்கள் கரையொதுங்கி வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதேவேளை அண்மையில் இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ்.3 என்கிற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துவல்கள்  மன்னார் கடற்கரையோர பகுதிகளில் கரை ஒதுங்கிய நிலையில் ஏற்கனவே குறித்த பிளாஸ்டிக் துவல்களை அகழ்வு செய்யும் நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டது. இந்த நிலையில்  ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தென் பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் தற்போது  மீண்டும் மன்னார் கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கி வருவதாக அறிய முடிகிறது.

Related Posts