போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான் – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார் . இணுவில் பகுதியை சேர்ந்த தவில் வித்துவான் , யாழ் நகர் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடுவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரசிய தகவலின் அடிப்படையில் குறித்த வித்துவானை கைது செய்து சோதனையிட்ட வேளை அவரது உடைமையில் இருந்து 490 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை  காவல்துறையினா்  மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரை    காவல் நிலையத்தில் தடுத்து வைத்து   காவல்துறையினா்  விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , குறித்த நபருக்கு போதைப்பொருளை யாழ் . நகர் பகுதியில் வைத்து விற்பனை செய்த நபர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ,  அந்நபரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்   காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்

Related Posts