நீங்கள் அறியாத கதை!

நீங்கள் அறியாத கதை!

by ilankai

அனுமதியில்லா கட்டிடத்தை அகற்ற போய் திட்டமிட்டு உள்புகுத்தப்பட்ட இனவாதமும் மதவாதமும்  எனும் தலைப்பில்; சமூக செயற்பாட்டாளர் ஒருவர் எழுதிய கட்டுரை இது:மக்கள் விளிப்படையவிட்டால் வேதனையில் துடிக்க போவது வீர வசனம் பேசும் அரசியல் வாதிகளோ இனத்திற்காக பேசுகின்றோம் என்ற ஒரு சில முகம் காட்டா முகநூல் போராளிகளோ அல்ல என்ற புரிதலை வரலாற்றில் இருந்து தேடுங்கள்!திருகோணமலை பிரச்சினையைப் பற்றி நீங்கள் அறியாத கதை👉 இப்போது பலர் அறிந்திருக்கும் கதை என்னவென்றால்,// திருகோணமலை மாவட்டத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட முதல் தர்ம போதனை பாடசாலையான மிஹிந்துபுர மகிந்தவங்ச குணானுஸ்மரண (ஞாபகார்த்த) பாடசாலை கட்டிடத்தின் அடிக்கல் 2025.11.16 ஞாயிற்றுக்கிழமை காலை 09.09 மணிக்கு திருகோணமலைப் பகுதியின் பௌத்த தேரர் மற்றும் மக்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.பின்னர் அதே நாள் (16) இரவில் அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு முயன்ற போது, பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இடையே பதற்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் பொலிஸார் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை துறைமுகப் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றிருந்தனர்.நேற்றிரவு ஏற்பட்ட கலகத்தின் போது, இந்த சிலை வைப்பின் முன்னோடிகளில் ஒருவரான பலங்கொடை கஸ்ஸப்ப என்ற பிக்கு, மற்றும் திருகோணமலையின்கல்யாணவங்கசத்திஸ்ஸ ஆகியோர்  காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் இன்று (17) மதியம் 1 மணியளவில் அச் சிலை மீண்டும் அதே இடத்தில் வைத்துள்ளனர்…அடுத்து, பலர் கூறாத சில உண்மைகள் (Facts) உள்ளன: 1. 1951 ஆம் ஆண்டிலிருந்து இந்த இடத்தில் விஹாரை இருந்ததற்கான சான்றுகள்சான்றுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன.(படத்தில் இணைத்துள்ளேன்)2. பாதுகாப்பு காரணங்களால், அங்கு இருந்த விஹாரை  இராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டிருந்தது.(இணைக்கப்பட்டுள்ளது)3.இங்கு இருந்த பழைய தர்ம பாடசாலையில் படித்த பலர் இன்று வரை திருகோணமலையில் வாழ்கின்றனர் , என கூறப்படுகின்றது.4. சுனாமி பேரழிவுக்குப் பிறகு அந்தக் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அந்தப் பகுதி கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள மேலாண்மை திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டு வந்தது( படத்தை காணலாம்)5.பின்னர் 2014 ஆம் ஆண்டு, அதற்கான நிலம் 40 பேர்ச் Mahinda Rajapaksa அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது புனித பூமி (பூஜா பூமி ஒப்பந்தம்” )மூலம் ஶ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரைக்கு வழங்கப்பட்டது.(உறுதி பத்திரம் இணைக்கப்பட்டுள்ளது)6 நிலத்தின் உரிமை விஹாரைக்கு இருந்தாலும், பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் கடற்கரை பாதுகாப்புதிணைக்களத்தவர்களாலே நிர்வகிக்கப்கட்டு வந்தது.ஆனால் விஹாரை நிர்வாகத்தினராலே அந்த நிலம் சுற்றுபுற வேலியிட்டு பராமரித்து வந்தனர்.7.இன்றைய புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்திலிருந்து ஐந்து அடிக்கு இடதுபுறமாக பெரிய அரச மரம் ஒன்றும், அதனடியில் மேலுமொரு புத்தர் சிலையும் உள்ளது. “அங்கு புத்தர் சிலைகள் இல்லை” என்பது பொய்யான குற்றச்சாட்டு. அதேசமயம் அருகில் இரண்டு விஹாரைகளும் உள்ளன; அவற்றை திருகோணமலையி கல்யாணவங்கசத்திஸ்ஸ என்ற பிக்குவினாலே நிர்வகிக்க படுகின்றது.அவர்கள் காப்பாற்றுகின்றனதுஇங்கே உள்ள உண்மையான பிரச்சினை தர்ம பாடசாலை பற்றியது அல்ல. இந்த விஹாரைக்கு சொந்தமான 40 பர்சஸ் நிலத்தில் உள்ள கடை (Photo 03, 04 – The Land) பற்றியது.இந்த கடையை UNP-இன் திருகோணமலை அமைப்பாளர் தீபானி லியனகே என்பவரின்  மகள் மற்றும் மருமகன் நடத்தி வந்துள்ளதாகவும் , ‘அனுமதியில்லா நில ஆக்கிரமிப்பு’ குற்றச்சாட்டு அடிப்படையில் புகார் செய்யப்பட்டதாகவும், பின்னர் அஅந்த குற்றச்சாட்டு திரும்ப பெறப்பட்டதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.தீபானி லியனகே  இன் மகளிற்கு இருந்த குற்றச்சாட்டு கிழக்கு மாகாண முன்னாள்  ஆளுநராக இருந்த செந்தில் தொண்டமனுடன் இணைந்து நிலத்தை ஆக்கிரமித்ததேயாகும்.“இந்த நிலத்தினை குத்தகை அடிப்படையில் சிற்றுண்டிசாலை நடத்துவதற்காக L. திலக் பெறேரா( Thilak perera) என்பவரிற்கு பன்சலை நிருவாகத்தினர் வழங்கியிருந்தனர்.விஹரையை நடாத்தி செல்வதற்கு எந்த வருமானமும் இல்லாததால் தான் இது குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரே ஒரு ஆவணம் 2014வது  வருடம் மஹிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்ட புனித பூமி என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆவணம் மட்டுமே! இதை ஆதாரமாக கொண்டே இவர்கள் வியாபாரத்தை நடாத்தி சென்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையிலே CCD (கடற்கரை பாதுகாப்பு திணைக்களம்) மற்றும் நகரசபை இணைந்து அனுமதி பெறப்படாமல்  கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறி வியாபாரத்தை நடாத்த தடை விதித்தவுடன் மேலும் இந்த வியாபாரத்தை தொடர விரும்பின் அனுமதி பெற வேண்டிய இடங்களை பட்டியலிட்டு கொடுத்து அனுமதிகள் பெறப்பட்ட வியாபாரத்தை நடாத்தி செல்லலாம் எனவும் கூறியிருந்தனர்.அனுமதி பெற்று கொள்ள வேண்டிய திணைக்களங்களாக பரிந்துரைக்க பட்டவை1)கட்டட நிர்மாண திணைக்களம்2)பௌத்தசாசன அமைச்சு3)கடற்கரை பாதுகாப்பு திணைக்களம்4)கடல்வள பாதுகாப்பு திணைக்களம்5) சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகாரசபை6) நகரசபை7) வீதி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி திணைக்களம்கடற்கரை பாதுகாப்பு/கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தால்  (CCD)CCCRN/ADC/6578’ அனுமதி வழங்கப்பட்டது ஆனால. 2024 ம் ஆண்டு அனுமதியில்லா கட்டிடம் என்று  உணவகம் நடத்தியவர்கள. மேல் வழக்கு தாக்கல் செய்தது. ஆனால் அந்த நீதிமன்ற வழக்கினை பொருட்படுத்தாமல் உணவகம் நடத்தி சென்றதே இந்த பிரச்சனை தோன்ற முதல் காரணம். ( இந்த வழக்கு இன்னும் நிலைவையில் உள்ளது.இதன் தொடர்ச்சியாக 2025.07.18 அன்று கரையோர பாதுகாப்பு அதிகாரசபையால் (CCD)  2023 இல் வழங்கிய அனுமதியை  ரத்து செய்ததுடன் அனுமதியுன்றி கட்டப்பட்ட கட்டிடதஅதை  உடனடியாக அகற்றும் படி கட்டளை இட்டனர்.அத்துடன்  CCD திறைவேற்று பணிப்பாளர் இந்தக் கட்டடத்தை உடன் அகற்ற பொலிசாருக்கு உத்தரவு வழங்கினார்.4/11/2025 ஆம் தேதி பொலிஸார் CCD உடன் இணைந்துசட்டவிரோத கட்டடத்தை அகற்ற வந்தனர். அப்போது விஹாரை நிருவாகம் 7 நாட்களிற்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.ஆனாலும. அவர்கள் பொலிஸில் முறைப்பாட்டை செய்திருந்தனர் நகரசபையால் “2024 இல் திலக்கிற்கு எதிராக போடப்பட்ட வழக்கில் இந்தக் கட்டுடம் சான்றாக தேவைப்படுகின்றது; இதை அகற்ற முடியாது என்று முரண்டு பிடித்தனர்.ஆனால் அதற்கு பொலிசார் இடங்கொடுக்கவில்லை. இருப்பினும் இதை நாங்கள் நீதிமன்றில் பார்த்து கொள்ளுகின்றோம் அதற்குமேலும்  7 நாட்கள் அனுமதி கேட்டிருந்தனர் அனுமதியும். வழங்கப்பட்டது.அந்த 7 நாட்களும் முடிந்தது கடந்த வெள்ளிக்கிழமை. அடுத்த வேலை நாள் இன்று. (திங்கட்கிழமை)ஆனால் புத்தர் சிலை வந்தது நேற்று – 16 ஆம் தேதி ஞாயிறு.“கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெவ்வேறு எல்லைகள் உள்ளன. அதன் அடிப்படையில் வணிகத்திற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் ‘இந்தக் காலத்திற்குள் மட்டுமே பயன்படுத்தலாம்’ என்ற காலவரையும் உள்ளது. அது முடிந்ததும் புதுப்பிக்க வேண்டும்.இங்குள்ள பிரச்சனை என்னவென்றால்அவர்களுக்கு வழங்கிய அளவை மீறி சிறு சிறு குடிசைகள் அனுமதியை மீறி அமைத்ததனால்  CCD யினர் அதை  நிறுத்தினர்.அத்துடன் அனைத்து குடிசைகளையும் 7 நாட்களில் அகற்ற  உத்தரவு பிறப்பித்தனர்.அந்த 7 நாட்கள் முடிந்ததும் இந்த கட்டுமானத்தை செய்துள்ளனர். CCD வந்து மீண்டும் புகார் கொடுத்தது — ‘அனுமதியில்லா கட்டிடம்’.கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த வழிபாட்டு தளமோ அல்லது கட்டிடமோ அமைக்க அனுமதி அவசியம். ஆனால் இங்கே எந்த அனுமதியும் பெறப்படவில்லை. அதனால் அவர்கள் ‘இதை அகற்றுங்கள்’ என்றனர்.”நிலம் என்பது மக்களுக்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட விஷயம்.திருகோணமலை மாவட்டம் அத்தகைய சூழ்நிலைகளுக்குப் பிரபலமான பகுதி. ஆயிரக்கணக்கான நிலங்கள் தொல்பொருள் துறை மற்றும் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். ஊடகங்களும்/ஊடகவியலாளர்களும் தாங்கள் பிரதிநிதித்துவ படுத்தும் இனத்தை /மத்த்தை/ மொழியை முன்னிறுத்தியே கருத்துக்களை திணிக்கின்றனர் உண்மைகள் ஆய்வுகள் மூலம் ஆராய்ந்து வெளிப்படுத்த படுவதில்லை.அவர்கள் ஒருபக்கத்தையே பேசுவர்/ இந்த பிரச்சினை இங்கேயே முடியும் விஷயம் அல்ல. இது பெரிய பிரச்சினையின் தொடக்கம் கூட ஆகலாம்!!

Related Posts