திருமலையில். பாதுகாப்பு காரணத்திற்காகவே புத்தர் சிலை அகற்றப்பட்டதாம் – மீண்டும் சிலை அவ்விடத்தில் நிறுவப்படும்

by ilankai

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்றைய தினம் புத்தர் சிலை தொடர்பில் பேசப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று , புத்தர் சிலை நிறுவப்பட்டது. அதற்கு பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், நேற்றைய தினம் இரவு , பிக்குகளின் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பொலிஸாரினால் புத்தர் சிலை அகற்றப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மீண்டும் புத்தர் சிலை நிறுவப்படும் என தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Related Posts