திருகோணமலை கடற்கரையில் நேற்று அகற்றப்பட்ட புத்தர் சிலை மீள நிறுவப்பட்டமை கடுமையான அதிர்வலைகளை தமிழ் அரசியல் அரங்கில் தோற்றுவித்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை,அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து காவல்துறையினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. அங்கு நிறுவப்பட்ட புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. எனினும் அந்த புத்தர் சிலை, இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல்; அதே இடத்தில் மீண்டும் பிக்குகள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று புத்தர் சிலை பிரதிஸ்டை செய்ய முற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.சம்பவ இடத்துக்குற் சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்நிலையில் நேற்றிரவு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்வதற்கு பௌத்த பிக்குகள் முயற்சித்த நிலையில்; கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.இதனையடுத்து கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை காவல்துறையினரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டிருந்தது.அத்தோடு, அப்பகுதியில் விசேட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் இன்று மீண்டும் பௌத்த பிக்குகள் மத்தியில் காவல்துறை பாதுகாப்புடன் புத்தர் சிலை மீள எடுத்துவரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.
திருமலை:அந்தரத்தில் தொங்கும் அனுர அரசு!
7