யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பொலிஸ் பிரிவினருக்குக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மருத்துவ பீட இரண்டாம் வருட மாணவனை கைது செய்து சோதனையிட்ட போது , மாணவனின் உடமையில் இருந்து, 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த மாணவன் ஊவா மாகாணத்தை சேர்ந்த பெரும்பான்மையின மாணவன் எனவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் மாணவனை முற்படுத்திய நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருளுடன் கைதான யாழ். மருத்துவபீட மாணவன் விளக்கமறியலில்
1
previous post