4
தென்னிலங்கையின் மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உணவகம் ஒன்றுக்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் ஒருவரின் மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட மஹதுர நளீன் என்பவரின் சகோதரி ஆவார்.இந்த துப்பாக்கிச்சூடானது கடந்த 5 ஆம் திகதி பாதாள உலக குழு குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் மச்சான் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிகின்றனர்.