வெனிசுலா – அமெரிக்கா இடையேயான பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் கரீபியன் கடலுக்குள் நுழைந்தன.அமெரிக்க கடற்படை தனது மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கி கப்பல் கரீபியன் கடலில் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறுகிறது.வெனிசுலாவுக்கு எதிராக வெள்ளை மாளிகை தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையில் , அமெரிக்க கடற்படை ஞாயிற்றுக்கிழமை அதன் மிகவும் மேம்பட்ட போர் கப்பல்கள் கரீபியன் கடலுக்கு வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தியது.யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு மற்றும் அதனுடன் இணைந்த கேரியர் தாக்குதல் கப்பல்களும் வந்தடைந்தன. இதில் போர் விமானங்கள், இரண்டு வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பாண்கள் மற்றும் பிற துணை கப்பல்கள் மற்றும் விமானங்கள் அடங்கும். ஆபரேஷன் சதர்ன் ஸ்பியரின் ஒரு பகுதியாக கரீபியனில் ஏற்கனவே பல அமெரிக்க போர்க்கப்பல்களுடன் இணைந்ததாகத் அமொிக்கக் கடற்படையின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட ஒரு டஜன் கடற்படைக் கப்பல்களும், சுமார் 12,000 மாலுமிகளும், கடற்படையினரும் தற்போது கரீபியனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.அமெரிக்கப் படைகள், எங்கள் பிராந்தியத்தை சீர்குலைக்க முயலும் நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளன என்று கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்காவை மேற்பார்வையிடும் அமெரிக்க தெற்கு கட்டளைத் தளபதி (SOUTHCOM) அட்மிரல் ஆல்வின் ஹோல்சி ஒரு அறிக்கையில் கூறினார்.# US warships Caribbean Sea # Venezuela tension # USS Gerald R. Ford
வெனிசுலாப் போர்ப் பதற்றம்: கரீபியன் கடலுக்கு வந்தது போர்க் கப்பல்!
5
previous post