சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு செய்தவரிடம் வாக்குமூலம் பதிவு

by ilankai

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக முறைப்பாட்டை முன்வைத்த சிவில் அமைப்பின் சஞ்சீவ மஹவத்தவிடம், நேற்றையதினம் 6 மணித்தியாலங்களாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாகக் கூறியே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விசாரணைகளை எதிர்கொள்ள தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts