எதியோப்பியா நாட்டில் மார்பேர்க் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது எபோலா போன்று கொடிய நோய்க் கிருமிகளில் ஒன்றாகும். இந்த நோய்த் தொற்று கடுமையான இரத்தப்போக்கு, காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்துகிறது. இந்நோயின் தாக்கம் 21 நாட்கள் வரை நீண்டு செல்கிறது.25 முதல் 80 விழுக்காடு வரை இறப்பைக் கொண்டுள்ளது. எதியோப்பியாவின் தெற்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது என்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.மார்பேர்க் வைரஸ் நோய் (MVD) தேசிய குறிப்பு ஆய்வகத்தால் (எத்தியோப்பியாவில்) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் (The Africa Centres for Disease Control) தெரிவித்துள்ளது.மேலும் தொற்றுநோயியல் விசாரணைகள் மற்றும் ஆய்வக பகுப்பாய்வுகள் நடந்து வருகின்றன, மேலும் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு கிழக்கு ஆப்பிரிக்காவில் முன்னர் அடையாளம் காணப்பட்டவற்றுடன் ஒற்றுமையைக் காட்டுகிறது என ஆபிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் என்ற அமைப்பு கூறியுள்ளது.எதியோப்பியாவின் ஜிங்கா பகுதியில் இந்த நோயின் பரவல் உறுதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் எத்தியோப்பிய சுகாதார அதிகாரிகள் விரைவாக செயல்பட்டதாக ஆபிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் என்ற அமைப்புத் தெரிவித்தது.கிழக்கு ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளுக்கு வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கும், பயனுள்ள பதிலை உறுதி செய்வதற்கும் எத்தியோப்பியாவுடன் இணைந்து செயல்படும் என்று ஆபிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் என்ற அமைப்பு மேலும் கூறியது.Marburg virus
எதியோப்பியா கொடிய மார்பேர்க் வைரஸ் பரவுவதை உறுதி செய்தது
5
previous post