யாழ்ப்பாணத்தில் கஞ்சா, ஐஸ் போதைப் பொருட்களுடனும் , அவற்றினை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் , கையடக்க தொலைபேசி என்பவற்றுடன் , 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியில் , போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு கும்பல் ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஐவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கேரள கஞ்சா 01 கிலோ 51 கிராம் , ஐஸ் போதைப்பொருள் 20 கிராம் 620 மில்லிகிராம், போதைப்பொருள் வலையமைப்பை பேணியதாக சந்தேகிக்கப்படும் 04 கையடக்க தொலைபேசிகள், போதைப்பொருள் விற்றதன் மூலம் பெறப்பட்ட 15ஆயிரத்து 720 ரூபாய், போதைப் பொருளை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட நபர்களை , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழில். போதைப்பொருள் கும்பலின் வலையமைப்பை பேணிய கையடக்க தொலைபேசிகளுடன் ஐவர் கைது – போதைப்பொருட்களும் மீட்பு
3