2
யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் , நகரை அண்டிய பகுதியில் போதை பொருள் விற்பனையில் நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது, 2 கிலோ 750 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடனும் 50 போதை மாத்திரைகளுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் Spread the love கஞ்சா கலந்த மாவாபோதை பொருள் விற்பனைபோதை மாத்திரைகள்