IMF:விரும்பும் பாதீட்டுக்கே நிதி?

by ilankai

2026 வரவுசெலவுத் திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின்; நிதி திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட உறுதிமொழிகளுக்கு இணங்குகிறதா என்பதை மதிப்பிடுவதற்காக பட்ஜெட் ஆவணங்களை சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள் மதிப்பாய்வு செய்து வருவதாக நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசக்  தெரிவித்தார்.இந்த மதிப்பீடு ஐந்தாவது மதிப்பாய்வின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என கூறினார். வரும் வாரங்களில் சர்வதேச நாணயத்தின்  நிர்வாகக் குழு இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்கும் என்று   ஐந்தாவது மதிப்பாய்வை நிர்வாகக் குழு அங்கீகரித்த பிறகு, இலங்கைக்கு ஆறாவது தவணையாக 347 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் என்று அவர் கூறினார்.இலங்கையின் பொருளாதார வளர்ச்சி திறனை மேம்படுத்த கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம் என்று அவர் கூறினார். தொடர்ச்சியான சீர்திருத்தம் தேவைப்படும் பல பகுதிகளை சர்வதேச நாணயத்தின்  நிர்வாகக் குழு அடையாளம் கண்டுள்ளதாக  கோசக் கூறினார்.வர்த்தக வசதி தொடர்பான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதிலும், நாட்டிற்குள் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான விதிமுறைகளை மேம்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் கூறினார்.

Related Posts