4
கம்பளையில் 16 வயது சிறுமியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் தனது வீட்டில் உயிர்மாய்த்த நிலையில் , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பளையை சேர்ந்த 16 வயதான சிறுமி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காதல் விவகாரத்தால் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் , காதலனே கொலை செய்ததாகவும் கூறி காதலனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். அந்நிலையில் தேடப்பட்ட நபர் தனது வீட்டில் உயிர் மாய்த்த நிலையில் , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.