இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த படகினை மீட்க சென்ற படகின் இயந்திரமும் பழுதடைந்தமையால் , காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் , படகில் இருந்த கடற்தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு , காரைதீவு பகுதியில் இருந்து ,நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு படகொன்றில் கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர்கள் , நள்ளிரவை தாண்டிய வேளை , தமது படகின் இயந்திரம் பழுதடைந்து கடலில் தத்தளித்துக்கொண்டு இருப்பதாக , கரையில் உள்ள சக தொழிலாளிகளுக்கு அறிவித்துள்ளனர் அதனை அடுத்து படகில் இருந்த கடற்தொழிலாளர்களையும் படகினையும் மீட்கும் நோக்குடன் மீட்பு படகில் தொழிலாளிகள் கடலுக்குள் சென்று , பழுதடைந்த படகில் இருந்த தொழிலாளிகளை தமது படகில் ஏற்றி , படகோட்டியுடன் பழுதடைந்த படகினை கரை சேர்க்கும் நோக்குடன் தமது படகில் கட்டி இழுத்து வந்தனர். அந்நிலையில் மீட்க சென்ற படகின் இயந்திரமும் திடீரென பழுதடைந்தமையால் , இரு படகுகளும் கடலுக்குள் தத்தளித்ததுடன் காற்றின் வேகத்தால் படகுகளும் மோதிக்கொண்டனஅதில் பழுதடைந்த படகில் இருந்த படகோட்டி காயமடைந்துள்ளார். தெய்வாதீனமாக இரு படகுகளும் கரை தட்டியமையால் , படகில் இருந்த ஏனையவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாது கரை சேர்ந்தனர். காயமடைந்த படகோட்டி சிகிச்சைக்காக ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயந்திர கோளாறினால் கரைதட்டிய படகுகள் – பெரும் சேதம் தவிர்ப்பு
6