தென்னிலங்கை பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக கும்பல்களது தப்பி செல்கின்ற மார்க்கமாக வடக்கு கடற்பரப்பு மாறிவருகின்றது.கொலைகள் மற்றும் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தரப்புக்கள் கைதுகளிலிருந்து தப்பிக்க வடக்கிலுள்ள தரப்புக்கள் சிலவற்றின் உதவியுடன் கடலின் ஊடாக தமிழகத்திற்கு தப்பி செல்லமுற்படுகின்றமையே தற்போது அம்பலமாகிவருகின்றது.இந்நிலையில் சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஸ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (13) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை (13) காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை விசாரித்தபோது அவர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஸ்கோடி வந்து இறங்கியது தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.அவரை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சூசை தாசன் என தெரியவந்துள்ளது.எனினும் எத்தகைய நோக்கத்திற்காக அவர் தமிழகம் சென்றிருந்தார் என்ற தகவல் வெளிவந்திருக்கவில்லை.
வடக்கு கடல் தெற்கின் பாதையாகிறதா?
3