போதைப்பொருளை மீட்க சென்ற காவல்துறையினரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சோதனையிட்ட போது , இளைஞனிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை காவல்துறையினர் மீட்டிருந்தனர். குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக காவல்துறையினருக்கு இளைஞன் கூறியுள்ளார். அதனை அடுத்து குறித்த இளைஞனை கைது செய்யும் நோக்குடன் , நாவற்குழியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்ற வேளை, வாளினை காட்டி காவல்துறையினரை அச்சுறுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை இளைஞனை காவல்துறையினர் மடக்கி பிடித்து , கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளை காவல்துறையினர் மீட்டனர். மேலதிக விசாரணைகளில் , யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் குறித்த இளைஞனுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை காவல் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
காவல்துறையினரை வாளைக் காட்டி அச்சுறுத்தியவருக்கு நீதிமன்றங்களில் 25 வழக்குகள் நிலுவையில் – Global Tamil News
4
previous post