யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

by ilankai

யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது ஆதீரா Thursday, November 13, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் கலட்டி பகுதியில் மூன்று இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட வேளை அவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் எனவும் , மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம் என பொலிஸார் தெரிவித்துள்னர்.  Related Posts யாழ்ப்பாணம் NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Posts