மருத்துவ பீடத்திற்கு பேருந்து! – Global Tamil News

மருத்துவ பீடத்திற்கு பேருந்து! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவ பீடம் வரையில் அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர்கள் விடுதி, மருத்துவ பீடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள, யாழ். நகர் பகுதியில் போதனா வைத்திய சாலைக்கு அருகில் காணப்படுகிறது. அத்துடன் மாணவர்கள் உள்ளக பயிற்சிகளுக்காக போதனா வைத்திய சாலைக்கு மருத்துவ பீடத்திற்கு வர வேண்டிய தேவையுள்ளது. இதனால் மாணவர்கள் போக்குவரத்தில் பல இடர்களை எதிர்கொண்டு வந்தனர். அந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, மருத்துவ பீடம் வரையில் பேருந்து சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

Related Posts