இந்தியா தலைநகர் டில்லி செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் டில்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. குண்டுவெடித்ததால், காரில் இருந்த பாகங்கள் 300 அடி தூரத்திற்கு வீசி எறியப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து தகவல் அறிந்ததும் பொலிசார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து டில்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.கார் யாருக்குச் சொந்தமானது? காரை யார் அங்கு நிறுத்தியது என்பதை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.ஹரியாணா பொலிஸார் இன்று சோதனையில் ஈடுபட்டபோது ஃபரிதாபாத் அருகே 360 கிலோ வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 2,900 கிலோ வெடிப்பொருள்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.
டில்லி செங்கோட்டை:குண்டு வெடிப்பு!
4