பருத்தித்துறை கடலில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

by ilankai

யாழ்ப்பாணத்தில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதியில்  ,அத்துமீறி படகொன்றில் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 14 கடற்தொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் . கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும், அவர்களின் படகினையும் காங்கேந்துறை கடற்படை தளத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Related Posts