த்தின் ஒழுங்கமைப்பில் “அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு” மற்றும் நாட்டிசட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையன் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றி இருந்தார். தொடர்ந்து “தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?” என்ற தலைப்பில், தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலும் இடம்பெற்றது. குறித்த கடலந்துரையடலில். நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கலந்துரையாடலை , சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் நெறியாள்கை செய்திருந்தார். நிகழ்வில் சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு ! – Global Tamil News
4