பிள்ளையாரின் வெள்ளி கவசத்தை திருடியவர் கைது – Global Tamil News

பிள்ளையாரின் வெள்ளி கவசத்தை திருடியவர் கைது – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் பிள்ளையார் சிலையின் வெள்ளியிலான கவசத்தை களவாடியவர் ஒரு மாத காலத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி ,கல்வயல் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலையின் சுமார் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெள்ளியிலான கவசத்தை கடந்த மாதம் திருட்டு போயிருந்தது. அது தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் , ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்திருந்த நிலையில் ,  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அந்நிலையில் , கவசத்தை திருடியவர் தொடர்பிலான இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதை , அடுத்து அந்நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை திருடிய கவசத்தை உருக்கிய நிலையில் , காவல்துறையினா்  மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை சாவகச்சேரி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து  காவல்துறையினா்   விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts